விப்ரோ நிறுவனம் கம்ப்யூட்டர் உற்பத்தி செய்யும் தொழிலிலிருந்து வெளியேறி விட்டதாக தெரிவித்துள்ளது. மாறி வரும் சந்தை சூழலை கருத்தில் கொண்டு இம்முடிவை எடுத்துள்ளதாக விப்ரோ கூறியுள்ளது. எனினும் மற்ற மற்ற மின்னணு சாதனங்கள் உற்பத்தியை தொடரப் போவதாகவும் மென்பொருள் சேவைகளில் கூடுதல் கவனம் செலுத்தப் போவதாகவும் விப்ரோ தெரிவித்துள்ளது.
கையடக்க கணினிகள் பிரபலமாகி வருவதால் உலகெங்கும் டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர்களின் விற்பனை குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment